பிரான்ஸ், ஸ்பெயின் மக்களுக்கு நிம்மதி

பிரான்ஸ், ஸ்பெயின் மக்களுக்கு நிம்மதி

1 mins read
f9c8ad67-7c6f-4cfb-83d2-a5b06846cfcb
ஸ்பெ­யின் தனது கட்­டுப்­பா­ட்டுத் தளர்வு திட்­டத்தை எந்­நே­ரத்­தி­லும் அறி­விக்­கக்­கூ­டும். அதே­நே­ரம் மே 11 முதல் கட்­டுப்­பா­டு­க­ளை தளர்த்த தயா­ராகி வரு­வ­தாக பிரான்ஸ் தெரி­வித்து உள்­ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

பாரிஸ்: கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த பல வாரங்­க­ளாக மக்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்தி வைத்­துள்ள முடக்­க­நி­லை­யைத் தளர்த்த பிரான்­சும் ஸ்பெ­யி­னும் தயா­ராகி வரு­கின்­றன. அதற்­கான திட்­டங்­க­ளைத் தயா­ரிப்­ப­தில் அவை மும்­மு­ர­மாக ஈடு­பட்டு உள்­ளன. உலக அள­வில் கிரு­மித்­தொற்று ஆக அதி­க­மா­கப் பாதிக்­கப்­பட்ட நாடு­க­ளின் பட்­டி­ய­லில் இவை இரண்­டும் உள்­ளன.

மரண விகி­தம் படிப்­ப­டி­யா­கக் குறைந்து வரு­வ­தா­ல் ஆஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட பல நாடு­கள் மக்­கள் வீட்­டுக்­குள்­ளேயே இருக்க விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­க­ளைப் படிப்­ப­டி­யா­கத் தளர்த்தி வரு­கின்­றன. அமெ­ரிக்­கா­வின் பல மாநி­லங்­கள் பொரு­ளி­யலை மீட்­டெ­டுக்­கும் முயற்­சி­யாக கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தி வரு­கின்­றன. அதே­போல ஐரோப்­பா­வின் சில வட்­டா­ரங்­களில் பள்­ளிக்­கூ­டங்­களும் கடை­களும் திறக்­கப்­பட்டு உள்­ளன. அடுத்த வாரம் முதல் இத்­தா­லி­யும் கத­வு­க­ளைத் திறக்க உள்­ளது. பொது­மக்­கள் வெளி­யில் சென்று உற­வி­னர்­க­ளைச் சந்­திக்­க­லாம் என்­ற­போ­தி­லும் கைகு­லுக்­கு­வ­தும் கட்­டிப்­பிடிப்­ப­தும் கூடாது என்று இத்­தா­லிய அர­சாங்­கம் தெரி­வித்து உள்­ளது. வெளி­யில் இருக்­கும் எல்லா நேரங்­க­ளி­லும் முகக் கவ­சத்தை கட்­டா­யம் அணிய வேண்­டும் என்­ப­தும் அதன் உத்­த­ரவு.

ஸ்பெ­யின் தனது கட்­டுப்­பா­ட்டுத் தளர்வு திட்­டத்தை எந்­நே­ரத்­தி­லும் அறி­விக்­கக்­கூ­டும். அதே­நே­ரம் மே 11 முதல் கட்­டுப்­பா­டு­க­ளை தளர்த்த தயா­ராகி வரு­வ­தாக பிரான்ஸ் தெரி­வித்து உள்­ளது.