மூன்று மில்லியனை கடந்த கிருமித்தொற்று

மூன்று மில்லியனை கடந்த கிருமித்தொற்று

2 mins read
4c052056-d4dc-4e07-8c57-ff44aaff3445
சீனாவின் பெய்ஜிங் நகரில் பொதுப்போக்குவரத்துப் பயணிகளிடம் உடல்வெப்பநிலை சரிபார்க்கப்படுகிறது. படம்: இபிஏ -

பெய்­ஜிங்: கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை உலகள­வில் மூன்று மில்­லி­ய­னைக் கடந்­து­விட்­டது. திங்­கட்­கி­ழமை பின்­னே­ரத்­தில் அந்த எண்­ணிக்கை 3,003,344 ஆக இருந்­தது என்­றும் அமெ­ரிக்­கா­வில் மட்­டும் கிட்­டத்­தட்ட ஒரு மில்­லி­யன் சம்­ப­வங்­கள் பதி­வாகி இருப்­ப­தா­க­வும் ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் கூறி உள்­ளது.

உல­கம் முழு­வ­தும் பாதிக்­கப்­பட்­டோ­ரில் மூன்­றில் ஒரு­வர் அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்­த­வர் என்ற விவ­ரத்தை வெளி­யிட்ட ராய்ட்டர்ஸ், 987,022 பேர் அங்கு பாதிக்­கப்­பட்டு உள்ள நிலை­யில் ஒவ்­வொரு நாளும் அந்த எண்­ணிக்கை படு­வே­க­மாக உயர்ந்­து­கொண்டே செல்­கிறது என்­றும் செவ்­வாய்க்­கி­ழமை அது ஒரு மில்­லி­ய­னைக் கடந்­து­வி­டும் என்­றும் குறிப்­பிட்­டது.

திங்­கட்­கி­ழமை நில­வ­ரப்­படி அமெ­ரிக்­கா­வுக்கு அடுத்த நிலை­யில் ஸ்பெ­யி­னில் 229,422, இத்­தா­லி­யில் 199,414, பிரான்­சில் 165,962, ஜெர்­ம­னி­யில் 158,434 என கொரோனா கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பட்­டி­ய­லி­டப்­பட்டு உள்­ளன.

உல­க­ளா­விய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் இது­வரை காணாத அள­விற்­குக் கடந்த வாரம் அதி­க­ரித்­தன. ஒவ்­வொரு நாளும் சரா­ச­ரி­யாக 82,000 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் கடந்த வாரம் பதி­வா­யின. இவற்­றில் 43% ஐரோப்­பா­வி­லும் 25% அமெ­ரிக்­கா­வி­லும் காணப்­பட்­டன.

பாதிக்­கப்­பட்­டோர் நில­வ­ரம் இவ்­வா­றி­ருக்க, உலகில் கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை திங்­கட்­கி­ழமை 210,800 ஆனது.

ஆனால், உல­க­ள­வி­லான கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை இன்­னும் அதி­க­மாக இருக்­கக்­கூ­டும் என்­றும் மித­மான அறி­குறி காணப்­பட்­டோ­ரும் அறி­குறி காணப்­ப­டா­ம­லேயே பாதிக்­கப்­பட்­டோ­ரும் இந்­தக் கணக்­கில் அடங்­க­வில்லை என்­றும் ராய்ட்­டர்ஸ் செய்தி தெரி­விக்­கிறது.

கொரோனா கிரு­மித்­தொற்று கடந்­தாண்டு இறு­தி­யில் உரு­வா­ன­தா­கச் சொல்­லப்­பட்­டா­லும் இவ்­வாண்டு ஜன­வரி 10ஆம் தேதி சீனா­வின் வூஹான் நக­ரில் 41 பேர் பாதிக்­கப்­பட்­ட­தாக உறுதி செய்­யப்­பட்­டதே முதல் சம்­ப­வ­மா­கப் பதி வானது.

உலக அள­வில் ஆண்­டு­தோ­றும் சளிக்­காய்ச்­ச­லால் மூன்று மில்­லி­யன் முதல் ஐந்து மில்­லி­யன் பேர் வரை பாதிக்­கப்­ப­டு­வது வழக்­கம் என்­றும் கொரோனா கிரு­மி­யால் நான்கு வாரங்­களில் மூன்று மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்டு உள்­ளார்­கள் என்­றும் உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்து உள்­ளது.