காற்றில் கலந்துள்ள கொரோனா: ஆய்வு

காற்றில் கலந்துள்ள கொரோனா: ஆய்வு

2 mins read
3ddaf254-491e-4a72-adb1-8810524c2660
கொரோனா கிரு­மி­யின் மர­பணு  மூலக்­கூறு காற்­றில் உள்­ள­தாக சீன விஞ்­ஞா­னி­கள் மேற்­கொண்ட ஆய்­வில் தெரியவந்­துள்­ளது. படம்: ஏஎப்பி -

பெய்­ஜிங்: கொரோனா கிரு­மி­யின் மர­பணு மூலக்­கூறு காற்­றில் உள்­ள­தாக சீன விஞ்­ஞா­னி­கள் மேற்­கொண்ட ஆய்­வில் தெரியவந்­துள்­ளது.

கொரோனா கிரு­மிப் பர­வல் தொடங்­கிய சீனா­வின் வூஹான் நக­ரி­லுள்ள இரு அரசு மருத்­து­வ­மனை­கள் உட்­பட 31 இடங்­களில் காற்­றில் உள்ள கிரு­மி­கள் குறித்து கடந்த பிப்­ர­வரி மற்­றும் மார்ச் மாதங்­களில் விஞ்­ஞானி கி லன் தலை­மை­யி­லான குழு ஆய்வு மேற்­கொண்­டது.

இந்த ஆய்­வ­றிக்கை, 'நேச்­சர் ரிசர்ச்' இத­ழில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

விஞ்­ஞா­னி­கள் சேக­ரித்த மாதி­ரி­களில் காற்றில் கிருமி உள்­ளது உறுதி செய்­யப்­பட்­டா­லும் அவை தொற்­று­நோ­யாகப் பர­வக்­கூ­டுமா என்­பது குறித்து உறு­தி­யாக தெரி­ய­வில்லை.

ஆனால் மூச்சு­வி­டு­தல் மற்­றும் பேசு­வ­தன் மூலம் வெளி­யா­கும் சிறிய நீர்த்­து­ளி­கள் காற்­றில் உய­ரத்­திற்­குச் சென்று, அது மற்­ற­வர்­க­ளால் சுவா­சிக்­கப்­படும் என்­கிறது ஆய்வு.

"காற்­றின்­வழி பர­வு­வ­தற்­கான சாத்­தி­யம் இருப்­ப­தாக இது வலு­வாக அறி­வு­றுத்­து­கிறது," என்­றார் வெர்­ஜினியா டெக்­ சிவில் மற்­றும் சுற்­றுச்­சூ­ழல் பொறி­யி­யல் பேரா­சி­ரி­யர் லின்சி மார்.

கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­கள் இருந்த மருத்­து­வ­மனை­க­ளின் உட்­பு­றம் மற்­றும் வெளிப்­பு­றத்­தில் எடுக்­கப்­பட்ட மாதி­ரி­களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

காற்­றோட்­ட­முள்ள நோயா­ளி­க­ளின் அறை­களில், இந்த மூலக்­கூறு அணு­வின் அடர்த்தி மிகக் குறை­வாகக் காணப்­பட்­டது.

அதே­ச­ம­யம், கழிப்­பறை போன்ற வெளிக்­காற்று வச­தி­யற்ற இடங்­களில், அடர்த்தி அதி­க­மாக இருந்­தது.

மருத்­து­வ­ம­னைக்­குள்­ளும் வெளி­யி­லும் அதி­க­மா­னோர் நட­மாடியதன் கார­ண­மாக மூலக்­கூறு அணு அதி­கம் காணப்­பட்­டது.

மருத்­து­வர்­கள் மற்­றும் மருத்­துவ உத­வி­யா­ளர்­கள் பாது­காப்பு ஆடை­களை மாற்­றும் அறை­களில் மூலக்­கூறு அணு­வின் அடர்த்தி அதி­க­மாகக் காணப்­பட்­டது.

கிருமி நாசினி தெளிப்பு உள்­ளிட்ட தூய்மை நட­வ­டிக்­கை­க­ளுக்­குப்பின், காற்­றில் உள்ள கிரு­மி­யின் மூலக்­கூறு அணு வெகு­வாக குறைந்து இருந்­தது.

குறிப்­பாக, பொது இடங்­கள், வணிக வளா­கங்­கள், குடி­யி­ருப்புப் பகு­தி­கள் ஆகி­ய­வற்­றில் கொரோனா மூலக்­கூறு அணு குறை­வா­கவே இருந்­தது என அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.