குற்றச்சாட்டை மறுத்த பிகேஆர் கட்சி உறுப்பினர் புஷியா சாலே

குற்றச்சாட்டை மறுத்த பிகேஆர் கட்சி உறுப்பினர் புஷியா சாலே

1 mins read
f051c1df-4a09-47f1-a421-4d778d0d2a8f
தமது ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக, பொய்ச் செய்தியை பரப்பியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார் பி.கே.ஆர் கட்சியின் குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் புஷியா சாலே. படம்: பெர்னாமா -

கோலாலம்பூர்: அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் தமது ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக, பொய்ச் செய்தியை பரப்பியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார் பி.கே.ஆர் கட்சியின் குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் புஷியா சாலே.

ஜோகூர் பாரு சுங்க, குடிநுழைவு, தடுப்பு மையத்தில் கலவரம் ஏற்பட்டது போன்ற தோற்றத்தை வெளிப்படுத்திய காணொளியைப் பகிர்ந்ததைத் தொடர்ந்து அவர் மீது இக்குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடும்.