அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து சில சீன நிறுவனங்களை விலக்கும் மசோதா

அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து சில சீன நிறுவனங்களை விலக்கும் மசோதா

1 mins read
a98c00fd-e0f1-4da9-a2fd-5a85efc62347
அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து சில சீன நிறுவனங்களை நீக்கும் மசோதா நேற்று செனட் சபையில் நிறைவேறியது. லூசியானாவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜான் கென்னடி, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிறிஸ் வான் ஹோலன் ஆகிய இருவரும் மசோதாவை அறிமுகப்படுத்தினர். நியூயார்க் பங்குச் சந்தைக் கட்டடம். படம்: நியூயார்க் டைம்ஸ் -

வாஷிங்டன்: அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து சில சீன நிறுவனங்களை நீக்கும் மசோதா நேற்று செனட் சபையில் நிறைவேறியது. லூசியானாவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜான் கென்னடி, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிறிஸ் வான் ஹோலன் ஆகிய இருவரும் மசோதாவை அறிமுகப்படுத்தினர்.

புதிய மசோதாவின்படி சீன நிறுவனங்கள் வெளிநாட்டு அரசாங்கத்தின் கீழ் இல்லை என்பதை நிரூபிக்கும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஃபாக்ஸ் தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த கென்னடி, நாஸ்டாக், நியூயார்க் பங்குச் சந்தை ஆகிய இரண்டிற்கும் புதிய மசோதா பொருந்தும் என்று குறிப்பிட்டார்.

மசோதாவுக்கு குடியரசுக் கட்சியின் நார்த் டகோட்டாவின் கெவின் கிராமரும் புளோரிடாவின் ரிக் ஸ்காட்டும் ஆதரவு அளித்திருந்தனர்.