விலங்குக் காட்சி சாலையில் விலங்குகளை கொல்லும் அவலநிலை

பண்டுங்: இந்தோனீசியாவில் கொரோனா கிருமி பரவல் காரணமாக விலங்குக் காட்சி சாலையின் கதவுகள் மூடப்பட்டதால் அது வருமானம் இன்றி தவிக்கிறது. விலங்கு களுக்கு உணவு வாங்கக்கூட பணமில்லை. இதனால் சில விலங்கு களைக் கொன்று மற்ற விலங்குகளுக்கு உணவளிப்பது பற்றி விலங்குக்காட்சி சாலையின் அதி காரிகள் தீவிரமாக சிந்தித்து வருகின்றனர்.

இதன்படி சில மான்களைக் கொன்று அந்த இறைச்சியை சுமத்ரா புலி, சிறுத்தைப் புலி போன்றவற்றுக்கு உணவாக வழங்கப்படலாம்.

தற்போது அங்கிருக்கும் 850க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு வழக்கத்தைவிட குறைவாக உணவு அளிக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் ஜூலை மாதத்தில் விலங்குகளுக்கான உணவு தீர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சில விலங்குகளைக் கொல்ல வேண்டிய மோசமான சூழ்நிலைக்கு விலங்கியல் தோட்டத்தின் நிர்வாகிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தோனீசியாவின் நான்காவது பெரிய நகரமான பண்டுங்கில் உள்ள விலங்கியல் தோட்டம் மாதந்தோறும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து 1.2 பில்லியன் ரூப்யா (81,744 யுஎஸ் டாலர்) வருமானத்ைத ஈட்டி வந்தது.

ஆனால் கொரோனா கிருமி காரணமாக நாடு முடக்கப்பட்டதால் மார்ச் 23ஆம் தேதியிலிருந்து அதன் கதவுகளும் மூடப்பட்டன.

“எங்களிடம் முப்பது புள்ளி மான்கள் உள்ளன. அவற்றில் வயதான புள்ளிமான்களையும் இனப்பெருக்கம் செய்ய முடியாத புள்ளிமான்களையும் அடையாளம் கண்டுபிடித்து வைத்துள்ளோம். இவற்றைக் கொன்று சுமத்ரா புலி, சிறுத்தைப் புலி உயிர்களைக் காப்பாற்றுவோம்,” என்று விலங் கியல் காட்சி சாலையின் பேச்சாளர் சுல்ஹான் சையாஃபி சொன்னார்.

சில பறவைகளும் கொல்லப்படும் வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

சுமத்ரா புலி போன்ற பெரிய விலங்குகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எட்டு கிலோ இறைச்சி வழங்கப்படுகிறது. முன்பு பத்து கிலோ இறைச்சி வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் நாள் ஒன்றுக்கு 400 கிலோ பழங்களும் ஒரு நாள்விட்டு ஒரு நாளுக்கு 120 கிலோ இறைச்சியும் தேவைப்படுகிறது.

இதற்கிடையே நாட்டில் உள்ள 60க்கும் மேற்பட்ட விலங்குக் காட்சி சாலைகளில் மே மாதம் வரையில் மட்டுேம விலங்குகளுக்கு உணவு இருப்பதால் உதவி கேட்டு அதிபர் ஜோக்கோ விடோடோவுக்கு இந் தோனீசிய விலங்குக் காட்சி சாலைகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!