சுடச் சுடச் செய்திகள்

பரிசோதனை; ஆஸ்திரேலிய இளையர்களுக்கு அழைப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவின் நெரிசல்மிக்க மாநிலமான நியூ சவுத் வேல்சில் நேற்று முன்தினம் மூன்று புதிய சம்பவங்கள் மட்டுமே பதிவாகின. இதனால் கொரோனா கிருமிப் பரவலுக்கு எதிரான கட்டுப் பாடுகளைத் தளர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் கிருமித் தொற்று சோதனை செய்துகொள்ளும்படி இளையர்களுக்கு அரசு அழைப்பு விடுத்து உள்ளது.

சிட்னி நகரத்தை உள்ளடக்கிய நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் கிருமித் தொற்றால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கிருமித் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 7,100. இதில் பாதி பேர், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் புதிய தொற்றுச் சம்பவங்கள் ஏற்படுவது குறைந்து ஒற்றை இலக்கை எட்டியுள்ளது. இதையடுத்து ஜூன் 1ஆம் தேதியிலிருந்து இரவு கேளிக்கை விடுதி, மதுபானக் கூடங்களைத் திறக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

அதே சமயத்தில் இரண்டாவது கிருமிப் பரவல் அலை ஏற்படுவதைத் தவிர்க்க பாதுகாப்பான இடைவெளி, கிருமித் தொற்று பரிசோதனைகள் ஆகியவற்றை தொடர்ந்து நடப்பில் வைத்திருக்க அரசு முடிவு செய்துள்ளது.

“கொரோனா கிருமி பாதிப்பி லிருந்து மீண்டு வருவதில் முன் னேறி வருகிறோம். இதில் மக்களும் முக்கிய பங்காற்ற வேண்டும். சுவாசக் கோளாறு அறிகுறிகள் தென்பட்டாலே உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்,” என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகாதார அமைச்சர் பிராட் ஹஸ்ஸார்ட் தெரிவித்தார்.

அந்த மாநிலத்தில் மொத்தம் 3,086 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியா முழுவதும் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களும் மரணமும் குறைவாகவே உள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon