பெய்ஜிங்: சீனா உருவாக்கி வரும் கொரோனா கிருமி தடுப்பூசி பாதுகாப்பானதாகவும் புதிய கிருமித் தொற்றிலிருந்து மக்களை காக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பல்வேறு சோதனைக் கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வின் முடிவுகள் 'லான்செட்'டில் வெளியிடப்பட்டன. இந்த ஆய்வில் 18 வயது முதல் 60 வயது வரையிலான பலர் கலந்துகொண்டனர். ஒரு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் உடல்களில் இரு வாரங்களுக்குள் 'டி' எனப்படும் எதிர்ப்பு ஆற்றல் உயிரணுக்கள் உருவாகி யுள்ளன. இதனால் நம்பிக்கையளிக்கக்கூடிய வகையில் தடுப்பூசி இருப்பதாக பாஸ்டனில் உள்ள பெத் இஸ்ரேல் டீகோனஸ் மருத்துவ நிலையத்தின் தடுப்பூசி ஆய்வக இயக்குநர் டாக்டர் டேனியல் பருக் கூறியுள்ளார்.
சீனா உருவாக்கி வரும் தடுப்பூசி பலனளிக்கலாம்
1 mins read
படம்: ஏஎப்பி -

