ஜமால் கஷோகியைக் கொன்றவர்களை மன்னிக்க முடியாது என்கிறார் காதலி

ஜமால் கஷோகியைக் கொன்றவர்களை மன்னிக்க முடியாது என்கிறார் காதலி

1 mins read
92f3394f-0323-47d1-98a3-3a80a0da545c
சவூதி அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துவந்த கஷோகி,2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்துக்கு வந்தபோது கொல்லப்பட்டார். படம்: ஏஎப்பி -

வாஷிங்டன்: சவூதியின் செய்தியாளர் ஜமால் கஷோகியைக் கொன்றவர்களை மன்னிக்க முடியாது என்று துருக்கிய நாட்டவரான அவரது காதலி ஹாட்டிஸ் சென்கிஸ் கூறியுள்ளார். நேற்று முன்தினம் கஷோகியைக் கொன்றவர்களை புனித ரமலான் மாதத்தில் மன்னித்து விட்டதாக அவரது மகன்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் காதலி ஹாட்டிஸ் சென்கிஸ் கொலைகாரர்களை மன்னிக்க மாட்டேன் என்று டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். அவரைக் கொன்றவர்களை மன்னிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றும் அவர் கூறினார்.

சவூதி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துவந்த ஜமால் கஷோகி 2018ல் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்துக்கு வந்தபோது கொல்லப்பட்டார் எனக் கூறப்படுகிறது.