ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள விக்டோரியா மாநிலத்தில் கொரோனா கிருமித்தொற்று கூடாமல் இருந்துவருவதால் கலைக்கூடங்கள், அருங்காட்சியகங்கள், திறந்துவிடப்படுகின்றன.

வெளிப்புறங்களில் அதிகமானோர் கூடுவதற்கு அனுமதிக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெளிப்புற உடற்பயிற்சி நிலையங்கள், விளையாட்டுத் திடல்கள், சறுக்கு விளையாட்டுப் பூங்காக்கள் எல்லாம் நாளை செவ்வாய் முதல் திறக்கப்படும்.

மே 31 முதல் வீட்டிலும் வெளியிலும் 20 பேர் வரை கூடலாம் என்று மாநில முதல்வர் டேனியல் அறிவித்தார்.

கொரோனா சமூகப் பரவல் தொடர்ந்து குறைந்தால் ஜூன் 22 முதல் காப்பிக்கடைகள், உணவகங்கள், திரையரங்குகள், நிகழ்ச்சி அரங்குகள் எல்லாம் திறந்துவிடப்பட்டு 50 பேர் வரை கூட அனுமதிக்கப்படும்.

இருந்தாலும் மக்கள் ஜூன் முடிவு வரை வீட்டில் இருந்துதான் வேலை பார்க்கவேண்டும். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்துவர வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!