பாகிஸ்தானில் ஒரே நாளில் 2,164 பேருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 54,601

நோன்புப் பெருநாள் நெருங்கி வந்த நிலையில் பாகிஸ்தானில் கொரோனாவுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

அங்கு ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 52,000ஐ தாண்டிய நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 2,164 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  

தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 54,601 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு 32 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,133 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானின் முக்கிய சமய விழாக்களில் ஒன்றான நோன்புப் பெருநாளான நேற்று (மே 24) , கொரோனா அச்சம் காரணமாக மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ஹைதராபாத், பலுச்சிஸ்தானில் உள்ள குவெட்டா ஆகிய இடங்களில் கூட்டு தொழுகைகள் வெளியிடத்தில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
 

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online