பிரிட்டிஷ் பிரதமருக்கு நெருக்கடி

பிரிட்டிஷ் பிரதமருக்கு நெருக்கடி

1 mins read
effd2566-0d9e-4db0-b4d0-2308b8f5a6b7
மூத்த ஆலோசகர் டொமினிக் கமிங்ஸ். படம்: ஊடகம் -

லண்டன்: கொரோனா கிருமிப் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்ட நிலையில் ஊர் சுற்றிய மூத்த ஆலோசகர் டொமினிக் கமிங்ஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.

இந்த விவகாரத்தை அரசாங்கம் முறையாகக் கையாளவில்லை என்றும் அமைச்சர்களின் ஆலோ சகர்கள் உட்பட பலர் குறை கூறியுள்ளனர்.

ஆனால் டொமினிக் கமிங்ஸை தற்காத்துப் பேசிய பிரதமர் ஜான்சன், "அவரும் அவரது மனைவியும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக் கலாம் என்ற சூழ்நிலையில் குழந்தையைக் கவனித்துக் கொள்ள அவர் லண்டனி லிருந்து டர்ஹாமுக்குச் சென்றார்," என்றார்.

இதற்கிடையே வரும் ஜூன் 1ஆம் தேதியிலிருந்து தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படுவதை பிரதமர் ஜான்சன் உறுதி கூறி உள்ளார்.