சுடச் சுடச் செய்திகள்

மக்களுக்கு சீனா அழைப்பு

புதுடெல்லி: ஊரடங்கு உத்தரவால் நாடு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிரமப்பட்டு வரும் தங்கள் நாட்டு குடிமக்களை உடனடியாகத் திரும்பும்படி சீனா வலியுறுத்தி உள்ளது.

டெல்லியில் உள்ள சீனத் தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மக்கள் நாடு திரும்பு வதற்கு ஏதுவாக அந்நாடு சிறப்பு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு தூதரக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறி விப்பில், இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள், சுற்றுப் பயணிகள், வர்த்தகர் கள் சிறப்பு விமானங்களில் சீனாவுக்குத் திரும்ப இன்று மே 27ஆம் தேதி காலைக்குள் பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையே, சீனாவின் இந்த முடிவு அரசியல் ரீதியா னது என்று கூறப்படும் நிலையில், சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கையும் உறவில் மேலும் சிக்கலை உருவாக்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், லடாக்கில் அனைத்துலக எல்லைக் கோட்டுக்கு அருகே சீனா துருப்புகளைக் குவித்துள்ளது.

சீன ராணுவ வாகனங்களின் நடமாட்டமும் அதிகரித்து வரும் நிலையில் இந்திய ராணுவத் தளபதி நரவானே அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதையடுத்து இந்தியாவும் வீரர்களைக் குவிக்கத் தொடங்கி உள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon