நேற்று காலையில் 1,500 குடிசைகள் சாம்பல்

டெல்லியின் துக்ளகாபாத் குடிசைப் பகுதியில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் மூண்ட தீ விபத்தில் 1,500 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 28க்கும் மேலான தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இதுகுறித்து துணை போலிஸ் ஆணையர் ராஜேந்திர பிரசாத் மீனா கூறும்போது, “குடிசைப் பகுதியில் இருந்த 1,500 குடிசைகள் தீயில் சேதம் அடைந்துள்ளன. பெரியளவிலான, பயங்கரமான தீ விபத்து என்பதால் இழப்பை உடனடியாக மதிப்பிட்டுக் கூறிவிட முடியாது,” என்று கூறினார். படம்: ஊடகம்