நெருக்கடி நிலையை நீட்டிக்கும் தாய்லாந்து

பேங்காக்: தாய்லாந்து அமைச்சரவை அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை நெருக்கடி நிலையை நீட்டித்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் அந்நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து தாய்லாந்தில் புதிய கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் குறைந்து வரும் வேளையில் நெருக்கடி நிலை முடிவுக்கு வர வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூறி வந்தனர். எனினும், இப்போதைக்கு நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று அந்நாட்டு அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் நேற்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் கூறியிருப்பது மக்கள் இடையே மாறுபட்ட கருத்துகளை எழுப்பி உள்ளது.