சமூக இடைவெளி, பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் ஜெர்மனி

பெர்லின்: அடுத்த மாதம் 29ஆம் தேதி முதல் சமூக இடைவெளி நடைமுறைகளைத் தளர்த்த ஜெர்மனி திட்டம் கொண்டுள்ளது.

முன்னதாக திட்டமிட்டதைவிட முன்கூட்டியே இந்த நடைமுறையை அந்நாடு தளர்த்த எண்ணம் கொண்டுள்ளது.

அதுபோக, அடுத்த மாதம் நடுப்பகுதியிலிருந்து 31 ஐரோப்பிய நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளை நீக்கவும் ஐரோப்பாவின் ஆகப் பெரிய பொருளியல் நாடான ஜெர்மனி இலக்கு நிர்ணயித்துள்ளது.

கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த ஜெர்மனியில் மார்ச் மாதம் நடப்புக்கு வந்த முடக்கநிலையைத் தளர்த்துவது குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் கலந்தாலோசனை நடத்திவரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.