கிருமித்தொற்றின் புதிய மையமாக தென் அமெரிக்க நாடுகள்

பிரே­சில்யா: கொரோனா கிரு­மித்­தொற்­றின் புதிய மைய­மாக தென் அமெ­ரிக்க நாடு­கள் உரு­வெ­டுத்­துள்­ள­தாக உலக சுகாதார அமைப்பு கூறி­யுள்­ளது.

பெரு, சிலி, எல் சால்­வ­டோர், குவாத்­த­மாலா மற்­றும் நிகா­ர­குவா ஆகிய நாடு­க­ளி­லும் கிரு­மித்­தொற்­றின் தாக்­கம் அதி­க­ரித்து வரு­வது உலக சுகா­தார அமைப்பை மேலும் கவ­லை­ய­டையச் செய்­துள்­ளது.

“நமது வட்­டா­ரம் தொற்­றின் புதிய மைய­மாக உரு­வெ­டுத்­துள்­ளது,” என்­றார் தென்­ அ­மெ­ரிக்க நாடு­க­ளுக்­கான உலக சுகா­தார அமைப்­பின் தலை­வ­ரான கரிசா எட்­டி­யென்.

தென்­ அ­மெ­ரிக்க நாடு­கள் கடு­மை­யான வாரங்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும் என்று தென்­அ­மெ­ரிக்கச் சுகா­தார அமைப்­பின் தலை­வர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

தின­சரி பாதிப்பு எண்­ணிக்கை ஐரோப்­பா­வை­யும் அமெ­ரிக்­கா­வை­யும்­விட லத்­தீன் அமெ­ரிக்­கா­வில் அதி­க­மாக பதி­வாகி வரு­கிறது.

பிரே­சி­லில் தொடர்ந்து ஐந்­தா­வது நாளாக அதி­க­பட்ச உயி­ரி­ழப்பு பதி­வா­கி­யுள்­ளது. கடை­சி­யாக வெளி­யான தக­வ­லின்­படி 24 மணி நேரத்­தில் 1,039 பேர் மாண்­ட­னர். கிரு­மித்­தொற்று தாக்­கத்­தில் உல­க­ள­வில் இரண்­டா­வது இடத்­தில் உள்ள பிரே­சிலில் 391,222 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். ஒட்­டு­மொத்­த­மாக 24,512 பேர் மாண்டனர்.

கிரு­மித்­தொற்­றை­விட பொரு­ளா­தார வீழ்ச்சி அதிக இழப்பை ஏற்­ப­டுத்­தும் என்று கூறும் பிரே­சில் அதி­பர் ஜெய்ர் போல்­ச­னாரோ முடக்க உத்­த­ரவை நடை­மு­றைப்­ப­டுத்த எதிர்ப்பு தெரி­வித்து வரும் வேளை­யில், வரும் ஆகஸ்ட் மாதத்­தொடக்கத்தில் அந்­நாட்­டில் உயி­ரி­ழப்­பு­கள் ஐந்து மடங்கு அதி­க­ரித்து, கிட்­டத்தட்ட 125,000 பேர் மாண்டு போகக்­கூ­டும் என்று அமெ­ரிக்­கா­வின் சுகா­தார அள­வீ­டு­கள் ஆய்வு நிறு­வ­னம் ஒன்று கணித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!