பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் தென்கொரியா

கொரோனா கிருமித் தொற்று எண்ணிக்கை தலைதூக்கியதைத் தொடர்ந்து தென்கொரியாவில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

ஒரு நாளுக்கு மூவரில் ஒருவர் மட்டுமே பள்ளிக்குச் செல்லமுடியும் என்றும் மற்றவர்கள் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்கவேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சீனாவிற்கு வெளியே தொடக்கத்திலேயே ஆக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக இருந்த தென்கொரியா, கிருமிப் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்தது. 

ஆனால் நேற்று அந்நாட்டில் புதிய கிருமித் தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் தலைதூக்கியது.