உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுவதாக டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்­டன்: கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு போது­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள தவ­றி­விட்ட கார­ணத்­தி­னால், உலக சுகா­தார அமைப்புட­னான உறவை அமெ­ரிக்கா துண்­டித்­துக்­கொள்­வ­தாக அதி­பர் டோனல்ட் டிரம்ப் அறி­வித்­துள்­ளார்.

கிரு­மிப் பர­வலை ஆரம்ப கட்­டத்­தி­லேயே கட்­டுப்­ப­டுத்த உலக சுகா­தார அமைப்பு தவ­றி­விட்­ட­தா­க­வும் சீனா­விற்கு ஆத­ர­வாக செயல்­பட்­ட­தா­க­வும் கூறி, உலக சுகா­தார அமைப்­பிற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்­து­வ­தாக முத­லில் டிரம்ப் அறி­வித்­தி­ருந்­தார். அதன்­படி ஏப்­ரல் மாதத்­திற்­கான நிதி­யை­யும் அமெ­ரிக்கா நிறுத்­தி­விட்­டது.

தொடர்ந்து உலக சுகா­தார மையம், சீனா­வின் கைப்­பாவை போல் செயல்­படுவதாக குற்­றஞ் சாட்டி வந்த டிரம்ப், உலக சுகா­தார அமைப்­பின் தலை­மைத்­து­வம் மற்­றும் செயல்­பாட்­டில் சீர்­தி­ருத்­தங்­கள் கொண்டு வரப்­ப­ட­வில்­லை­யென்­றால், நிரந்­த­ர­மாக நிதி முடக்­கப்­படும் என்­றும் எச்­ச­ரித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில் வெள்ளை மாளி­கை­யில் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பேட்டி அளித்த டிரம்ப், "நாங்­கள் கோரிய மற்­றும் பெரி­தும் தேவைப்­படும் சீர்­தி­ருத்­தங்­க­ளைச் செய்­யத் தவ­றி­ய­தால், உலக சுகா­தார அமைப்­பு­ட­னான உறவை நாங்­கள் இன்று முதல் துண்­டித்து கொள்­ளப்­

போ­கி­றோம்.

"இத­னால் அவர்­க­ளுக்கு இனி நாங்­கள் நிதி வழங்­க­மாட்­டோம். உலக சுகா­தார அமைப்பிற்கு வழங்­கப்­படும் நிதியை வேறு நாடு­க­ளுக்­கும் அவ­சர பொது சுகா­தா­ரத் தேவை­க­ளுக்­கும் பயன்­ப­டுத்த போகி­றோம்.

"கிரு­மிப் பர­வல் குறித்து சீனா உல­கிற்கு நிச்­ச­யம் பதி­ல­ளிக்க வேண்­டும், அதில் வெளிப்­ப­டைத்­தன்மை இருக்க வேண்­டும்," என்­றார். இதற்­கி­டையே, டிரம்ப்­பின் இந்த அறி­விப்பை அமெ­ரிக்க சுகா­தார நிபு­ணர்­கள் விமர்­சித்­துள்­ளனர்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்­டத்­தில் உலக சுகா­தார அமைப்­பின் தலை­வர் டெட்­ரோஸ் அதா­னோம் கெப்­ரே­யஸ் உலக நாடு­களை ஒன்­றி­ணைக்க முயன்று வரும்போது, டிரம்ப்­பின் இந்த அறி­விப்பு, அந்த முயற்­சிக்கு விழுந்த அடி­யா­கும் என்று ஜார்ஜ்­ட­வுன் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­ய­ர் லாரன்ஸ் கோஸ்­டின் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!