25 அமெரிக்க நகரங்களில் ஊரடங்கு

1 mins read
aaa8a333-296e-4dd5-baf4-5e6dcf8b60ff
அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவர் கொல்லப்பட்டதால் போலிசுக்கு எதிராக புரூக்லின், நியூயார்க், மின்னியாபோலிஸ், லாஸ் ஏஞ்சலிஸ், போர்ட்லண்ட், மயாமி, அட்லாண்டா, சிகாகோ ஆகிய நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது. படம்: நியூயார்க் டைம்ஸ் -

அமெரிக்காவில் கறுப்பின இளையர் ஒருவர் கொல்லப்பட்டதால் போலிசுக்கு எதிராக வெடித்த போராட்டம் பல நகரங்களுக்குப் பரவிவிட்டது. வாகனங்களுக்கும் கட்டடங்களுக்கும் தீயிடுவது, சேதப்படுத்துவது என போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதை அடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தேசிய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளிட்ட 25 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டியானாபோலிசில் நடந்த போராட்டத்தின்போது மூவர் சுடப்பட்டதாகவும் அதில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் அந்நகர போலிஸ் தலைவர் தெரிவித்தார். (படத்தில்) லாஸ் ஏஞ்சலிஸில் சறுக்குப் பலகையைக் கொண்டு கடையை அடித்து நொறுக்கும் போராட்டக்காரர்களில் ஒருவர். படம்: ஏஎஃப்பி