அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது

வாஷிங்­டன்: நிற­வெ­றிக்கு எதி­ரான போராட்டங்­களும் அதைத் தொடர்ந்த வன்­மு­றை­களும் அமெ­ரிக்­கா­வில் வலுத்து வரு­வ­தால், முக்­கிய நக­ரங்­களில் ஊர­டங்கு விதிக்­கப்­பட்­டுள்­ளது.

மினி­ய­போ­லிஸ் நகர போலிஸ் அதி­காரி ஒரு­வர் கறுப்­பின ஆட­வ­ரான 46 வயது ஜார்ஜ் ஃப்ளாயிட் என்­ப­வ­ரின் கழுத்­தில், தன்­னு­டைய முட்­டி­யால் மிதித்த காணொளி காட்சி பர­விக் கொண்­டி­ருந்­த­போது, அந்த ஆட­வ­ரின் மர­ணச் செய்தி அமெ­ரிக்­காவை உலுக்­கி­யது.

அதைத்­ தொ­டர்ந்து கறுப்­பி­னத்­த­வர்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீ­தி­க­ளுக்கு எதி­ரான குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்­பித்­தது.

ஆங்­காங்கே வன்­மு­றை­கள் வெடிக்­கத் தொடங்­கின. காவல் நிலை­யம் தீக்­கி­ரை­யா­னது. கடை­கள் சூறை­யா­டப்­பட்­டன. வாக­னங்­கள் சாம்­ப­லா­யின. ஐந்து நாட்­க­ளுக்கு முன்­னர் மினி­ய­போ­லி­சில் துவங்­கிய ஆர்ப்­பாட்­ட­மும் வன்­மு­றை­யும் தற்­போது 17 நக­ரங்­க­ளுக்­குப் பர­வி­யுள்­ளது.

சனிக்­கி­ழ­மை­யன்று டல்­லாஸ், சிகாகோ, சியாட்­டில், சால்ட் லேக் சிட்டி மற்­றும் கிளீவ்­லேண்ட் ஆகிய நக­ரங்­க­ளி­லும் மக்­கள் தங்­கள் எதிர்ப்­பு­க­ளைத் தெரி­வித்­த­னர்.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்­கும் போலி­சா­ருக்­கும் இடையே மோதல் பெருகி வரும் நிலை­யில், இரண்­டாம் உல­கப் போருக்­குப் பின்­னர் மினி­ய­போ­லி­சில் தேசிய காவல் படை­யி­னர் கள­மி­றக்­கப்­பட்­ட­னர்.

இது­பற்றி பேசிய மின­சொட்டா ஆளு­நர் டிம் வால்ட்ஸ், “ஃப்ளாயிட்­டின் மர­ணத்­திற்கு எதி­ரான போராட்­டத்­தைப் பயன்­ப­டுத்­திக் கொண்டு மற்ற கல­கக்­கா­ரர்­கள் குழப்­பத்தை விளை­விக்க முயல்­வ­தால், தேசிய பாது­காப்பு படை­யி­னர் கள­மி­றக்­கப்­ப­டு­வது அவ­சி­யம்,” என்­றார்.

லாஸ் ஏஞ்­ச­ல­ஸில் ‘கருப்­பர் உயிர்­கள் முக்­கி­யம்’ என்ற கோஷங்­கள் விண்­ணைப் பிளந்­தன. போலி­சார் தடி­யடி நடத்தினர். ரப்­பர் குண்­டு­க­ளைப் பயன்ப­டுத்­தி­னர்.

வன்­முறை தீயாய் பரவி வரும் 25 முக்­கிய அமெ­ரிக்க நக­ரங்­களில் இரவு எட்டு மணிக்கு மேல் ஊர­டங்கு நடை­மு­றை­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­ட­வர்­களில் இது­வரை 1,400 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் பேசிய டிரம்ப், ஜார்ஜ் ஃப்ளாயிட்­டின் மர­ணம் மிக­வும் சோக­மா­னது என்று தனது வருத்­தத்­தைத் தெரி­வித்­துள்­ளார்.

ஆனால் எதற்­கும் வன்­முறை ஒரு­போ­தும் தீர்­வா­காது என்­றும் வன்­முறை இரும்­புக்­க­ரம் கொண்டு ஒடுக்­கப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!