ரப்பர் குண்டு பாய்ந்து ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவர் காயம்

மின­சொட்டா: மினி­ய­போ­லி­சில் சனிக்­கி­ழ­மை­யன்று ஊர­டங்கு நேரத்­தில் கூடி­யி­ருந்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளைக் கலைக்க போலி­சார் ரப்­பர் குண்­டு­க­ளைப் பயன்­ப­டுத்­தி­னர். அப்­போது அந்த குண்­டு­கள் பட்டு இரண்டு ராய்ட்­டர்ஸ் செய்­தி­யா­ளர்­கள் காயமடைந்தனர்.

கேம­ரா­மேன் ஜூலியோ-சீசர் சாவேஸ் என்ற அந்த செய்­தி­யா­ளர் எடுத்த காணொ­ளி­யில், போலிஸ் அதி­காரி ஒரு­வர் அவரை நேர­டி­யாக குறி வைக்­கும் காட்சி பதி­வா­னது.

“அந்த போலிஸ் அதி­கா­ரியை நான் பட­மெ­டுத்­துக் கொண்­டி­ருந்தபோது, அவர் தனது ரப்­பர்-குண்டு துப்­பாக்­கியை நேராக என்னை நோக்கி திருப்­பி­னார்,” என்று திரு சாவேஸ் கூறி­னார்.

சில நிமி­டங்­களில், சாவேஸ் மற்­றும் ராய்ட்­டர்ஸ் பாது­காப்பு ஆலோ­ச­கர் ரோட்னி செவார்ட் இரு­வ­ரும் ரப்­பர் குண்­டு­க­ளால் தாக்­கப்­பட்­ட­னர்.

இந்த சம்­ப­வம் குறித்துப் பதி­ல­ளித்த மினி­ய­போ­லிஸ் காவல் துறை செய்­தித் தொடர்­பா­ளர் ஜான் எல்­டர் அக் காணொ­ளி­யின் நக­லைத் தரு­மாறு கோரி­யுள்­ளார். அவர் உட­ன­டி­யாக வேறு எது­வும் கூற­வில்லை.

தாங்­கள் செய்தி ஊடக உறுப்­பி­னர்­கள் என்­பது தெளி­வாக தெரி­யும்­படி செய்­தி­யா­ளர்­கள் தங்­க­ளது அடை­யாள அட்­டை­யை­யும் செய்­தி­யா­ளர் என்ற அடை­யா­ளத்­து­டன் கூடிய குண்டு துளைக்­காத ஆடை­யை­யும் அணிந்­தி­ருந்­த­னர்.

வெள்ளிக்கிழமையன்று நடந்த மற்றோர் சம்பவத்தில் ஆர்ப்பாட்டக் காரர்கள் கைது செய்யப்பட்டபோது, சிஎன்என் ஊடக செய்தியாளர் ஒருவரையும் போலிசார் கைது செய்தனர்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். அவரது கைதுக்கு மினசொட்டா ஆளுநர் மன்னிப்பு கோரியிருந்தார்.