பாரிஸ்: உலகளவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு மில்லியனாக உயர்ந்தது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 368,000ஆக உள்ளது. ஆக அதிகமாக அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் கிருமிப் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிரேசிலில் 500,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு முப்பதாயிரம் பேர் உயிரிழந்தனர்.
கிருமித்தொற்றை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவது என்ற டிரம்ப்பின் முடிவைப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

