நான்கு நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாட்டைத் தளர்த்த ஜப்பான் பரிசீலனை

தோக்­கியோ: தாய்­லாந்து, வியட்­னாம், ஆஸ்­தி­ரே­லியா மற்­றும் நியூ­சி­லாந்து ஆகிய நாடு­களில் கொரோனா தொற்று குறைந்து வரு­வ­தால், அந்­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்­து­வது குறித்து ஜப்­பான் பரி­சீ­லித்து வரு­வ­தாக ஜப்­பா­னின் யோமி­யூரி நாளி­தழ் தெரி­வித்­துள்­ளது.

அர­சாங்­கம் விரை­வில் இந்த கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­கும் என்­றும் அந்த செய்­தி­யில் கூறப்­பட்­டுள்­ளது.

பய­ணி­கள் தங்­கள் நாடு­களில் இருந்து கிளம்­பு­வ­தற்கு முன்­னர், கிரு­மித்­தொற்று இல்லை என்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தற்­கான ஆவ­ணங்­களை எடுத்­துச் செல்ல வேண்­டி­யது அவ­சி­யம்.

அதன் பிறகு ஜப்­பா­னுக்­குள் நுழை­யும்­போ­தும் அவர்­க­ளுக்கு மீண்­டும் கிரு­மித்­தொற்று பரி­சோ­தனை செய்­யப்­பட வேண்­டும் என்­றும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே போல் சீனா­வில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்­து­வது குறித்து ஜப்­பான் அர­சாங்­கம் எச்­ச­ரிக்­கை­யாக உள்­ளது.

ஏனெ­னில் எந்­த­வொரு விரை­வான அனு­ம­தி­யும் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும்.

மேலும் தென்கொரி­யா­வில் கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்து வரும் நிலை­யில், அந்­நாட்­டிற்­கான கட்­டுப்­பாடு­க­ளைத் தளர்த்­து­வ­தி­லும் ஜப்­பான் கவ­ன­மாக உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!