இலங்கை தமிழ் தலைவருக்கு அஞ்சலி செலுத்த திரண்டவர்களால் அச்சம்

கொழும்பு: ஊர­டங்கு உத்­த­ரவு மற்­றும் சமூக இடை­வெளி உத்­த­ர­வை­யும் பொருட்­ப­டுத்­தா­மல், மறைந்த தொழிற்­சங்­கத் தலை­வ­ரான ஆறு­மு­கன் தொண்­ட­மா­னின் உட­லுக்கு மரி­யாதை செலுத்த சனிக்­கி­ழ­மை­யன்று மக்­கள் திரண்­ட­தை­ய­டுத்து, கொரோனா தொற்று அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று இலங்கை அதி­கா­ரி­கள் அஞ்­சு­கின்­ற­னர்.

இலங்கை தோட்­டத் தொழி­லா­ளர் காங்­கி­ரஸ் தலை­வ­ரும் தோட்ட உள்­கட்­ட­மைப்பு வளர்ச்சி அமைச்­ச­ரு­மான 55 வயது ஆறு­மு­கன் தொண்­ட­மான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மார­டைப்­பால் கால­மா­னார்.

தொண்­ட­மா­னின் உட­லுக்கு அஞ்­சலி செலுத்த வருப­வர்­க­ளின் எண்­ணிக்­கையை கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக அங்கு 24 மணி நேர ஊர­டங்கு உத்­த­ரவு விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

அர­சாங்க மருத்­து­வர்­கள் குழு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "மக்­கள் அதி­க­மாக கூடு­வ­தால் இது­வரை எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­கள் மீதான நம்­பிக்­கையை குலைக்­கக்­கூ­டும் என்­றும் கிரு­மித்தொற்­றின் இரண்­டா­வது அலைக்கு வழி­வ­குக்­கக்­கூ­டும்," என்­றும் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யில் ஜன­வரி மாதம் முதல் கொரோனா நோயாளி அடை­யா­ளம் காணப்­பட்­ட­தில் இருந்து சுமார் 1,559 பேர் கிரு­மித் தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர். 10 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!