சுடச் சுடச் செய்திகள்

இந்தோனீசியாவில் போராளிகள் கத்தியால் தாக்கியதில் போலிஸ்காரர் பலி

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் போராளிகள் கத்தியால் தாக்கிய தால் போலிஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் மற்றொரு நபரும் காயம் அடைந்தார்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் போராளிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

போர்னியோ தீவில் உள்ள போலிஸ் சாவடியில் நேற்று விடியற் காலை திடீர் சோதனை மேற்கொண்டபோது போராளிகள் கத்தியுடன் தாக்கத் தொடங்கினர்.

இதையடுத்து போலிசார் அவர்களை நோக்கி சுட்டதில் போராளி ஒருவன் படுகாயம் அடைந்தான்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அந்தப் போராளி இறந்துவிட்டதாக தேசிய போலிஸ் படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் அவருக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் அந்தப் பேச்சாளர் சொன்னார்.

போராளிகளிடமிருந்து சாமுராய் வாள் உள்ளிட்ட பலதரப்பட்ட ஆயுதங்களை போலிசார் கைப்பற்றி உள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon