விண்வெளியில் பறக்கும் ஐந்து வீரர்கள்

விண்வெளியில் பறக்கும் ஐந்து வீரர்கள்

1 mins read
3b4499ef-8e55-42fd-b6df-74bb0b59fc76
படம்: நாசா டிவி -

நாசா என்று அழைக்கப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் இந்தப் படத்தை நேற்று வெளியிட்டது. 'ஸ்பேஸ்எக்ஸ்' எனும் தனியார் நிறுவனத்தின் விண்கலத்தில் அனுப்பப்பட்ட டோக் ஹர்லி, பாப் பெஹ்கென் (கறுப்பு சட்டை அணிந்தவர்கள்) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் ஏற்கெனவே விண்வெளியில் பறந்து கொண்டிருக்கும் 'ஐஎஸ்எஸ்' எனும் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்ய, அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுடன் சேர்ந்துகொண்டனர். முதல் முறையாக நாசா ஒரு தனியார் நிறுவனத்தின் போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. 'ஸ்பேஸ்எக்ஸ்' தனியார் நிறுவனம், பெரும் செல்வந்தரான எலோன் மஸ்க்குக்குச் சொந்தமானது. படம்: நாசா டிவி