‘போதிய அளவு நீர் உள்ளதால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பே இல்லை’

சென்னை: சென்னை மாந­க­ரில் போது­மான அள­வில் தண்­ணீர் இருப்பு உள்­ள­தால், இனி இந்த ஆண்டு முழு வதும் தண்­ணீர்ப் பற்­றாக்­குறை ஏற்­படும் என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்று கூறப்­பட்­டுள்­ளது.

ஒவ்­வொரு ஆண்­டும் கோடைக்­காலம் என்­றாலே தண்­ணீர்ப் பிரச்­சினை தலைவிரித்­தா­டத் தொடங்­கி­வி­டும். காலிக் குடங்­க­ளு­டன் மக்­கள் தண்­ணீ­ரைத் தேடி அலை­வ­தை­யும் காண­மு­டி­யும்.

இந்­நி­லை­யில், இந்த ஆண்டு கொரோனா அச்­ச­றுத்­த­லும் சேர்ந்து கொண்­ட­தால் தண்­ணீர்ப் பிரச்­சி­னை­யைச் சமா­ளிக்­க­மு­டி­யுமா என்ற பயம் நிலவி வந்­தது.

ஆனால், கொரோனா தாக்­கம் சென்னை நகர மக்­க­ளின் குடி­நீர்ப் பிரச்­சி­னையை சிறிய பிரச்­சி­னை­யாக்கி விட்­டது. பெரிய பேரங்­கா­டி­கள், ஓட்­டல்­கள் ஊர­டங்கு கார­ண­மாக மூடப்­பட்­ட­தால் குடி­நீர் தேவை பெரு­ம­ள­வில் குறைக்­கப்­பட்டிருந்தது.

சென்னை மாந­க­ரில் வசிக்­கும் மக்­க­ளின் குடி­நீர் தேவைக்­காக பூண்டி, புழல், சோழ­வ­ரம், செம்­ப­ரம்­பாக்­கம் ஏரி­களில் இருந்­து­தான் தண்­ணீர் எடுத்து பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. இது­த­விர வீரா­ணம், மீஞ்­சூர், நெம்­மேலி ஆகிய இடங்­களில் உள்ள கடல் நீரை குடி­நீ­ராக்­கும் மையங்களில் இருந்­தும் பெறப்­படும் தண்­ணீர் குடி­நீர்ப் பிரச்­சி­னையை சமா­ளிக்­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

நடப்­பாண்டு பருவமழை ஓர­ளவு கைகொ­டுத்­த­தால் ஏரி­களில் போது­மான தண்­ணீர் தேக்கி வைக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் ஆந்­திர மாநில அரசு 500 மில்­லி­யன் கன அடி நீரைத் திறந்து­விட சம்­ம­தம் தெரி­வித்து, தற்­போது நிமி­டத்­துக்கு 380 கன அடி நீர் வீதம் திறந்­து­விடப்பட்டு வரு­கிறது.

தற்­போது இருப்­பில் இருக்­கும் தண்­ணீர், ஆந்­திர மாநில அரசு திறந்து விட்­டுள்ள தண்­ணீர் மூலம் இந்த ஆண்டு முழு­வ­தும் தண்­ணீர்த் தேவையை பூர்த்தி செய்­து­கொள்ள முடி­யும் என்றும் கூறப்­பட்­டுள்­ளது.