ஹாங்காங்: அமெரிக்கா இரட்டை நிலைப்பாடு

ஹாங்­காங்: வன்­முறை ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு எதி­ராக அமெ­ரிக்கா இரட்டை நிலைப்­பாடு கொண்­டுள்­ள­தாகச் சாடி­யுள்­ளார் ஹாங்­காங் தலை­வர் கேரி லாம்.

"கடந்த சில நாட்­க­ளாக அமெ­ரிக்­கா­வில் கல­வ­ரங்­கள் நடப்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும். உள்­ளூர் அர­சாங்­கங்­கள் அதை எவ்­வாறு கையாண்­டன என்­பதையும் நாம் பார்க்­கி­றோம்.

"ஆனால், ஹாங்­காங்­கில் இதே­போன்ற வன்­மு­றை­கள் நடந்­த­போது ​​அவர்­கள் அப்­போது எந்த நிலைப்­பாட்டை ஏற்­றுக்­கொண்­டார்­கள் என்­ப­தும் நமக்கு தெரி­யும்.

"இது வன்­முறை ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு எதி­ரான அமெ­ரிக்­கா­வின் இரட்டை நிலைப்­பாட்டைத் தெளி­வாக காட்­டு­கிறது," என்று கூறி­னார் கேரி லாம்.

கடந்த ஆண்டு முழு­வ­தும் ஹாங்­காங் கல­வ­ரத்­தால் நிலை குலைந்து போனது.

அப்­போது கல­வ­ரத் தடுப்பு போலி­சார் கண்­ணீர் புகை­குண்­டு­கள் பயன்­ப­டுத்­தி­னர். தடி­யடி நடத்­தி­னர்.

வன்­மு­றையை கட்­டுப்­ப­டுத்த ஹாங்­காங் அர­சாங்­கம் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களை வாஷிங்­டன் கடு­மை­யாக விமர்­சித்து இருந்தது.

மேலும் சீன தேசிய பாது­காப்பு சட்­டத்தை கொண்டு வந்­தால், ஹாங்­காங்­கின் சிறப்பு தகு­தியை ரத்து செய்­வ­தா­க­வும் டிரம்ப் அறி­வித்­தார்.

சமூக அநீ­திக்கு எதி­ரான போராட்­டத்­தில் இது­போன்ற நட­வ­டிக்­கையை டிரம்ப் கையாண்­டால் அது அவ­ருக்கு சுய தோல்­வி­யைத் தரும் என்று கூறி­யுள்­ளார் கேரி லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!