ஆய்வு: சமூக இடைவெளியால் கிருமி தொற்றும் ஆபத்து குறைகிறது

லண்­டன்: குறைந்­தது ஒரு மீட்­டர் சமூக இடை­வெளி, முகக்­க­வ­சம் அணி­வது, கண் பாது­காப்பு ஆகி­யவை கொவிட்-19 கிரு­மித்தொற்­றும் அபா­யத்­தைக் குறைப்­ப­தற்­கான சிறந்த வழி­கள் என்று கொரோனா கிருமி பர­வல் குறித்த ஆய்­வில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இது­த­விர அடிக்­கடி கை கழு­வு­தல் மற்­றும் நல்ல சுகா­தா­ரம் பேணு­தல் ஆகி­யவை முக்­கி­ய­மா­னவை என்­பதை ஆராய்ச்­சி­யா­ளர்­கள் கண்­ட­றிந்­த­னர்.

என்­றா­லும் அந்த நட­வ­டிக்­கை­கள் அனைத்­தும்­கூட கொரோனா கிரு­மித்­தொற்று அபா­யத்­தில் இருந்து முழு­மை­யான பாது­காப்பை அளிக்­காது என்­றும் கூறப்­ப­டு­கிறது.

16 நாடு­களில் நடத்­தப்­பட்ட 172 ஆய்­வு­க­ளின் ஆதா­ரங்­களை அடிப்­ப­டை­யாக கொண்ட மதிப்­பாய்­வின் முடி­வு­கள் 'தி லான்­செட்' சஞ்­சி­கை­யில் திங்­க­ளன்று வெளி­யி­டப்­பட்­டது.

"நோய்­தொற்று பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான பொது­வான மற்­றும் எளி­மை­யான பரிந்­து­ரை­களை வழங்­கு­வது ஆய்­வின் நோக்­கம் என்­றார் ஆய்­வின் இணைத் தலை­வ­ரான மெக்­மாஸ்­டர் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஹோல்­கர் ஷேன்­மேன்.

குறைந்­தது 1 மீட்­டர் சமூக இடை­வெளி கிரு­மி பர­வும் அபா­யத்­தைக் குறைக்­கிறது என்­றும் 2 மீட்­டர் தூரம் மிக­வும் பய­னுள்­ள­தாக இருக்­கும் என்­றும் அவர்­கள் கண்­ட­றிந்­துள்­ள­னர். முகக்­க­வ­சம், கண் பாது­காப்பு உறை­க­ளால் இன்னும் நல்ல பலன்­ கிடைக்­கக்கூடும்.

மெக்­மாஸ்­டர் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் உதவி பேரா­சி­ரி­ய­ரான டெரெக் சூ, "முகக்­க­வ­சம் அணி­வது என்­பதை சமூக இடை­வெளி, கைகளை கழு­வு­வது போன்­ற­வற்­றுக்கு மாற்­றாக கரு­தக்­கூ­டாது," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!