கொல்லப்பட்ட கறுப்பின ஆடவருக்கு நீதி கேட்கும் மனைவி, மகள்

கொல்லப்பட்ட கறுப்பின ஆடவருக்கு நீதி கேட்கும் மனைவி, மகள்

1 mins read
84e67b62-e7db-4b5b-9147-e393f8f26e81
-

அமெரிக்காவின் மின்னியபொலிஸ் மாநிலத்தில் போலிசார் ஒருவரால் முட்டியால் கழுத்தில் மிதித்துக் கொல்லப்பட்ட கறுப்பின ஆடவரின் மனைவி, தமது கணவரின் மரணத்திற்காக நீதி கேட்டுள்ளார்.

"என் கணவர் நல்லவர். அதனால்தான் நான் அவருக்காகப் போராடுகிறேன். இது குறித்து என்னை எவர் எது நினைத்தாலும் கவலையில்லை," என்று ராக்சி வாஷிங்கடன், தமது ஆறு வயது மகளுடன் கண்ணீர் வடித்தபடியே செய்தியாளர்களிடம் கூறினார்.

கொல்லப்பட்ட 46 வயது ஜார்ஜ் பிளாய்ட், உணவகம் ஒன்றின் பாதுகாவல் அதிகாரியாகப் பணியாற்றியவர். கொவிட்-19 கிருமிப்பரவலால் வேலையிழந்த பிறகு அவர் தேவாலயம் ஒன்றுக்கு தொண்டூழியப் பணிகளைச் செய்து வந்தார். கடை ஒன்றில் திரு பிளாய்ட் செல்லாத பண நோட்டு ஒன்றைக் கொடுத்ததாக மகமுத் அபு என்ற கடைக்காரரின் புகாரின் பேரில் போலிசார் அவரைக் கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மூன்று போலிசாரிகளில் அதிகாரி டெரக் சாவின், கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்கள் தமது முட்டியால் ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் கழுத்தின் மீது அழுத்தினார். இச்சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. அந்த போலிஸ் அதிகாரியின் கொடிய செயலால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

"அவர் நல்லவர். இதற்கு இந்தப் பிள்ளைதான் சாட்சி," என்று ராக்சி தமது மகளைப் பற்றி செய்தியாளர்களிடம் கூறினார்.