அமெரிக்க மக்கள் அமைதி பேரணி

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் நீடித்த வன்­மு­றை­க­ளுக்கு நடுவே, எட்­டா­வது நாள் போராட்­டத்தை மக்­கள் அமை­தி­யா­க­வும் உணர்ச்சி வசப்­ப­ட்டா­லும் முன்­னெ­டுத்து சென்­ற­னர்.

கறுப்­பின ஆட­வர் ஜார்ஜ் ஃபிளாயிட் போலிஸ் பிடி­யில் இருக்­கும்­போது தாக்­கப்­பட்டு உயி­ரி­ழந்­த­தைத் தொடர்ந்து அமெ­ரிக்க மக்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

மினி­ய­போ­லி­சில் தொடங்­கிய அந்த போராட்­டம் பெரும்­பா­லான அமெ­ரிக்க நக­ரங்­க­ளுக்­கும் பர­வி­யது.

சில இடங்­களில் வன்­மு­றை­யாக மாறி­ய­தைத் தொடர்ந்து, அமெ­ரிக்க நக­ரங்­களில் ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

ஆனால் மக்­கள் ஊர­டங்­கை­யும் மீறி, ஆர்ப்­பாட்­டங்­க­ளி­லும் வன்­மு­றை­யி­லும் ஈடு­பட்­ட­தால் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் கைது செய்­யப்­பட்­ட­னர். போலி­சார் கண்­ணீர்ப் புகை குண்­டு­களை வீசி­னர். தடி­யடி நடத்­தி­னர்.

இந்­நி­லை­யில், உள்­ளூர் நேரப்­படி எட்­டா­வது நாளான நேற்று அமெ­ரிக்­கா­வின் பெரும்­பா­லான இடங்­களில் மக்­கள் அமைதிப் பேர­ணியை மேற்­கொண்­ட­னர்.

குறிப்­பாக இரவு நேரத்­தில் மக்­கள் ஊர­டங்கை மீறி திரண்­டா­லும் பேரணி அமை­தி­யாக நடை­பெற்­றது.

பில­டெல்­பியா, அட்­லாண்டா, டென்­வர் மற்­றும் சியாட்­டடி­லி­லும் பேர­ணி­கள் நடந்­தன.

ப்ரூக்­ளின், சிகாகோ, போர்ட்­லாண்ட் ஆகிய இடங்­களில் நிற­வெ­றிக்கு எதி­ரான கோஷங்­கள் எழுப்பி மக்­கள் அமைதி போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

ஊர­டங்கை மீறி­ய­வர்­கள் லாஸ் ஏஞ்­சல்­சில் கைது செய்­யப்­பட்­ட­னர். நியூ­யார்க்­கில் ஒரு சில கடை­கள் சூறை­யா­டப்­பட்­டன.

என்­றா­லும் நேரம் செல்ல செல்ல அங்­கும் அமைதி நில­வத் தொடங்­கி­யதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.

ஆர்ப்­பாட்­டங்­களை நேரடி ஒளி­ப­ரப்­பாக காண்­பித்து வந்த தொலைக்­காட்சி ஒளி­வ­ழி­களும் வழக்­க­மான நிகழ்ச்­சி­களை ஒளி­ப­ரப்­பத் தொடங்­கின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!