பிரேசிலில் ஒரே நாளில் ஆக அதிக உயிரிழப்பு

பிரேசிலில் ஒரே நாளில் ஆக அதிக உயிரிழப்பு

1 mins read
57324f94-b755-49a9-8148-6bc4571cd054
உல­க­ள­வில் அமெ­ரிக்­கா­விற்கு அடுத்­த­ப­டி­யாக பிரே­சி­லில் ஆக அதி­கம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். படம்: இபிஏ -

ரியோ டி ஜெனிரோ: கிரு­மித்­தொற்­றின் புதிய மைய­மா­க­வுள்ள பிரே­சி­லில் ஒரே நாளில் ஆக அதி­க­மான உயி­ரி­ழப்பு பதி­வா­னது.

நேற்று முன்­தி­னம் இங்கு 1,262 பேர் கிரு­மித்­தொற்­றுக்­குப் பலி­யா­கினர். இதை­ய­டுத்து பலி­யா­ன­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 31,999ஆக உள்­ளது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 555,383ஆக அதி­க­ரித்­துள்­ளது. உல­க­ள­வில் அமெ­ரிக்­கா­விற்கு அடுத்­த­ப­டி­யாக பிரே­சி­லில் ஆக அதி­கம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

"கிரு­மித்­தொற்­றின் பாதிப்­பும் உயி­ரி­ழப்­பும் பிரே­சி­லில் இன்­னும் மோச­ம­டை­யக்­கூ­டும் என்­றும் ஆனால் தற்­போ­தைய சூழ­லில் எப்­போது மோச­ம­டை­யக்­கூ­டும் என்­ப­தைக் கணிக்­க­மு­டி­ய­வில்லை," என்­றார் உலக சுகா­தார அமைப்­பின் அவ­சர திட்­டங்­க­ளின் நிர்­வாக இயக்­கு­ந­ரான டாக்­டர் மைக்­கேல் ராயன். சமூக இடை­வெ­ளி­யைப் பின்­பற்­று­வ­தை­யும் நாட்டை முடக்­கு­வ­தை­யும் எதிர்த்து வந்த அதி­பர் ஜெய்ர் போல்­ச­னாரோ, பொரு­ளா­தார வீழ்ச்­சியை குறைக்க மக்­கள் மீண்­டும் வேலைக்கு வரு­மாறு அழுத்­தம் கொடுக்­கி­றார்.