புதிய மசோதா தொடர்பில் சீனா பின்வாங்காது: கேரி லாம்

லண்­டன்: ஹாங்காங்கில் சீனா தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவதை பிரிட்டன் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அச்சட்டத்தை கொண்டு வரும் திட்டத்தில் இருந்து சீனா பின்வாங்காது என்று கூறியுள்ளார் ஹாங்காங் தலைவர் கேரி லாம்.

இச்சட்டம் தொடர்பான ஆலோசனைக்காக சீனாவிற்கான பயணத்தின்போது அவர் இவ்வாறு கூறினார்.

இதற்கிடையே, ஹாங்­காங்­கின் சுதந்­தி­ரத்­தைப் பறிக்­கும் தேசிய பாது­காப்பு சட்­டத்­தைச் சீனா கொண்டு வந்­தால், கிட்­டத்­தட்ட மூன்று மில்­லி­யன் ஹாங்­காங் குடி­மக்­க­ளுக்கு பிரிட்­டன் அடைக்­க­லம் தரும் என்று கூறி­யுள்­ளார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்­சன்.

தேசத்­து­ரோ­கம், பிரி­வினை, பயங்­க­ர­வா­தம் மற்­றும் வெளி­நாட்டு தலை­யீட்­டைக் கட்­டுப்­ப­டுத்த ஹாங்­காங்­கிற்­கா­கச் சட்­டங்­களை உரு­வாக்­கும் முடி­வுக்கு சீன நாடா­ளு­மன்­றம் கடந்த வாரம் ஒப்­பு­தல் அளித்­தது.

சீனா கொண்டு வரும் புதிய சட்­டம் ‘ஹாங்காங்கின் சுதந்­தி­ரத்­தைப் பறித்­து­வி­டும்’ என்­றும் பிரிட்­ட­னு­ட­னான ஒப்­பந்த விதி­மு­றை­களை மீறு­வ­தா­கும் என்­றும் ஜான்­சன் கூறி­னார்.

சீனா தொடர்ந்து தேசிய பாது­காப்பு சட்­டத்­தைக் கொண்டு வர பிடி­வா­தம் பிடித்­தால், பி.என்.ஓ எனப்­படும் சிறப்பு பிரிட்­டிஷ் பாஸ்­போர்ட் வைத்­தி­ருக்­கும் ஹாங்­காங் மக்­கள் 12 மாதங்­கள் வரை விசா இல்­லா­மல் பிரிட்­ட­னில் தங்­கு­வ­தற்கு ஏற்ற வகை­யில் குடி­நு­ழைவு விதி­மு­றை­களில் மாற்­றங்­கள் கொண்டு வரப்­படும் என்­றார்.

மேலும் அவர் குடி­யு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க வழி­வ­குக்­கக்­கூ­டிய, குடி­யேற்ற உரி­மை­கள், வேலை செய்­யும் உரிமை ஆகி­ய­வை­யும் வழங்­கப்­படும் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!