சீன தொடக்கப்பள்ளியில் கத்திக்குத்து- 39 பேர் காயம்

1 mins read
2071d010-ccf1-44a9-9c7f-745e9f563fa6
-

பெய்ஜிங்: தென் சீனாவிலுள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் திடீரென நுழைந்த கத்தி ஏந்திய ஆடவர், அங்குள்ள 37 பிள்ளைகளையும் இரண்டு பெரியவர்களையும் காயப்படுத்தியுள்ளார். தாக்குதல்காரன் அப்பள்ளியின் பாதுகாவல் அதிகாரி என்று சீன ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

பாதிக்கப்பட்டோர் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் யாவரும் உடல்நிலை தேறிவருவதாகவும் கவலைக்கிடமாக இல்லை என்றும் குவாங்ஸி மாநிலத்தின் காங்வூ மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாங்பூ சென்ட்ரல் தொடக்கப்பள்ளியில் இந்தச் சம்பவம் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.