சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பணப்புழக்க பிரச்சினைகள் மெதுவடைந்தன

சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பணப்புழக்க பிரச்சினைகள் மெதுவடைந்தன

1 mins read
7cf4122f-6850-44b6-939b-0a7a0f90c4b4
கொரோனா கிரு­மித்­தொற்­றுக்­குப் பிறகு வேலை தொடர்­பா­கப்  பெரு­ம­ள­வில் மாற்­றங்­கள் ஏற்­படும் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் தமது மே தினச் செய்­தி­யில் குறிப்­பிட்­டுள்­ளார். படம்: எஸ்டி -

அரசாங்கத்தின் நிவாரண உதவித் திட்டங்களால் சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பணப்புழக்கப் பிரச்சினைகள் மெதுவடைந்துபோல் காணப்படுகிறது என்று டிபிஎஸ் வங்கியின் ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆய்வில் பங்கேற்ற 300 நிறுவனங்களில் பத்தில் மூன்று பணப்புழபக்கப் பிரச்சினையே தங்களது பெரிய கவலையாக உள்ளது என்று தெரிவித்தன. இருப்பினும் அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரண உதவித் திட்டங்களால் பணப் புழக்கப் பிரச்சினைக ள் மெதுவடைந்துள்ளன என்றும் அவை கூறின.

ஒட்டுமொத்தத்தில் மின்னிலக்க உருமாற்றம், ஊழியரணி ஆற்றல் மேம்பாடு ஆகியவற்றுக்கு ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்கள் உடனடி முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பத்தில் ஒரு நிறுவனம் மட்டுமே மின்னிலக்க உருமாற்றத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக வும் மூன்று விழுக்காட்டு நிறுவனங்களே ஊழியரணி ஆற்றல் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிப்பதாக வும் தெ ரிவித்த ன. ஆய்வில் பங்கேற்ற பாதிக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மின்னிலக்கத் தீர்வுகள் பற்றி தங்களுக்குப் போதிய அறிவாற்றல் இல்லை என்றும் கூறின.