முதியவரைத் தள்ளிவிட்ட போலிசார் பணியிடை நீக்கம்

ஜார்ஜ் ஃபிளாயிட் மரணத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் பணியில் ஈடுபடும் போலிஸ்காரர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன .

இந்நிலையில், போலிசாரின் முரட்டுத்தனத்தைக் காட்டும் ஒரு காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நியூயார்க்கில் உள்ள புஃபல நகரில் நடைபெற்ற போராட்டத்தின்போது 75 வயது முதியவர் ஒருவர் போலிசாரை அணுகுகிறார். அப்போது போலிஸ்காரர்கள் இருவர் அவரைத் தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்துவிட்டதை அந்த காணொளி காண்பிக்கிறது.

சிகிச்சை பெற்று வரும் முதியவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக நியூயார்க் மேயர் தெரிவித்தார்.

இதற்கிடையே , முதியவரைத் தள்ளிவிட்ட இரண்டு போலிஸ் அதிகாரிகளும் சம்பளமில்லா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.