சவூதி அரேபியா, கத்தார் நாட்டில் இருந்து 340 பேர் வருகை

சென்னை: உலகெங்கும் விமானப் போக்குவரத்து முடங்கியதால் தாயகம் திரும்ப முடியாமல் பல நாட்டு மக்களும் அவதிக்குள்ளாயினர். இந்நிலையில், சவூதி அரேபியா, கத்தார் நாட்டில் சிக்கிய 340 பேர் சிறப்பு விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினர்.

விமான நிலையத்திலேயே தமிழக சுகாதாரத் துறை சார்பில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் அவர்கள் சென்னையில் உள்ள கல்லூரி, தங்கும் விடுதிகளில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.