போதைப்பொருள் கடத்தல்; மீண்டும் டுட்டர்ட்டே அதிரடி

போதைப்பொருள் கடத்தல்; மீண்டும் டுட்டர்ட்டே அதிரடி

1 mins read
8654b555-a52f-4c02-8ad9-d9cd8f8b731c
பிலிப்பீன்ஸில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கொன்று குவிக்கும் நடவடிக்கையை அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே மீண்டும் தொடங்கியுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ் -

மணிலா: பிலிப்பீன்ஸ் போலிசார் 756 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்ததைத்தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கொன்று குவிக்கும் நடவடிக்கையை அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே மீண்டும் தொடங்கியுள்ளார்.

பிடிபட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு 5.1 மில்லியன் பெசோ (142.71 மில்லியன் வெள்ளி) என்று பிலிப்பீன்ஸ் போலிசார் மதிப்பிட்டுள்ளனர்.

2016ஆம் ஆண்டில் பிலிப் பீன்சின் அதிபராக டுட்டர்ட்டே பொறுப்பேற்ற பிறகு பிடிபட்டுள்ள அதிக மதிப்பிலான பறிமுதல்களில் ஒன்றாகும் இது.