கிருமித்தொற்றால் ஆக அதிக உயிரிழப்பு: 3வது இடத்தில் பிரேசில்

கிருமித்தொற்றால் ஆக அதிக உயிரிழப்பு: 3வது இடத்தில் பிரேசில்

1 mins read
381b4fa9-4ce5-40b8-a96d-a6b5ed2924b8
பிரேசில் நாட்டின் மானாவ்ஸ் நகரில் கொவிட்-19 சோதனையில் ஈடுபடும் நலத்துறை ஊழியர்கள். தென்னமெரிக்கா நாடான இங்கு நேற்று முன்தினம் 1,473 பேர் மாண்டதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 34,000ஆக உயர்ந்தது. படம்: ராய்ட்டர்ஸ் -

ரியோ டி ஜெனிரோ: உலகளவில் கிருமித்தொற்றால் மூன்றாவது ஆக அதிகமாக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடாகியுள்ளது பிரேசில்.

ஆக அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த முதல் இரண்டுகளாக உள்ளது அமெரிக்காவும் பிரிட்டனும்.

தென்னமெரிக்கா நாடான பிரேசிலில் நேற்று முன்தினம் 1,473 பேர் மாண்டதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 34,000மாக உயர்ந்தது.

பிரேசிலில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்துவிட்டது.

முடிவுகள் வெளியாக வேண்டிய நிலையில் நிறைய பரிசோதனைகள் இருக்கும் நிலையில், பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போதைாய உலகின் தினசரி உயிரிழப்புகளில் 40 விழுக்காடு பிரேசிலில் ஏற்படுபவையாகும்.

இதற்கிடையே, 8,561 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள சாவ் பாலோ உள்ளிட்ட நகரங்களில் முடக்க உத்தரவுகள் தளர்த்தப்பட்டுவிட்டன.