பாகிஸ்தானில் வேகமாக அதிகரிக்கும் தொற்று

பாகிஸ்தானில் வேகமாக அதிகரிக்கும் தொற்று

1 mins read
1702555f-b1cb-491e-939a-b4215215181d
பாகிஸ்தானின் லாகூரில் கொவிட்-19 நெருக்கடியால் மூடிக்கிடக்கும் சந்தையில் இருந்து பொருட்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு வேறு ஓர் இடத்திற்குக் கொண்டுசெல்கிறார் இந்த ஊழியர். பாகிஸ்தானில் ஒரே நாளில் 4,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. படம்: இபிஏ-இஎஃப்ஏ. -

கராச்சி: பாகிஸ்தானில் ஒரே நாளில் 4,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,264ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 1,770 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, துபாய், சவூதி அரேபியா, சோமாலியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவித்த சுமார் 51,000 பேரை பாகிஸ்தான் அரசாங்கம் மீட்டுள்ளது.

பாகிஸ்தானிலும் பங்ளாதேஷிலும் கிருமித்தொற்று இரண்டு வாரங்களில் இரட்டிப்பாவதாகக் கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.

அந்நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், இந்த எண்ணிக்கை மேலும் வேகமாக அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.