‘இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இப்போது கிட்டி இருக்கிறது’

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக உலக நாடுகள் பல­வும் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­தி­யா­வின் நிலை மிக­வும் மோச­மாக இருக்­கிறது.

இருந்­தா­லும் இந்­தி­யா­வைப் பொறுத்­த­வரை இந்­தத் தொற்று அந்த நாட்­டுக்கு இப்­போது ஒரு வாய்ப்பை ஏற்­ப­டுத்­தித் தந்து இருப்­ப­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் குறிப்­பிட்­டுள்­ளது.

இப்போதைய காலநிலையைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்டு இந்­தியா தன்­னு­டைய சுக­ா­தாரப் பரா­ம­ரிப்புத் திட்­டத்தை மேம்­ப­டுத்த முடி­யும் என்று உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் தலை­வர் டெட்ரோஸ் குறிப்­பிட்­டார்.

குறிப்­பாக அடிப்­படை சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­பில் இந்­தியா ஒரு­மித்த கவ­னத்­தைச் செலுத்­த­லாம் என்று அவர் கூறி­னார்.

இந்­தி­யா­வில் கொவிட்-19 பாதிப்பு நாள்­தோ­றும் கூடி வரு­வது பற்றி கருத்து கேட்­ட­போது உலக அமைப்­பின் தலை­வர் இவ்­வாறு தெரி­வித்­தார்.