இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் போட்டி இல்லை

இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் போட்டி இல்லை

1 mins read
3f7923b2-00f5-4e67-a995-f2a5ee5bbe67
பாகாங் மாநில சினி தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் யாரையும் பக்கத்தான் ஹரப்பான் நிறுத்தாது என்று அதன் தலைமைச் செயலாளர் சாய்ஃபுதீன் தெரிவித்தார். படம்: எஸ்டி, செல்வின் சிங் -

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் நடக்கவிருக்கும் பாகாங் மாநில சினி தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் யாரையும் பக்கத்தான் ஹரப்பான் நிறுத்தாது என்று அதன் தலைமைச் செயலாளர் சாய்ஃபுதீன் தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா கிருமி இன்னமும் முற்றிலும் துடைத்து ஒழிக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டினார். ஆகையால் வாக்காளர்களின் பாதுகாப்பும் சுகாதாரப் பிரச்சினைகளும் இன்னமும் கவலை தரும் நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.

இவற்றை எல்லாம் மனதில் கொண்டு சினி இடைத்தேர்தலில் வேட்பாளர் யாரையும் நிறுத்துவதில்லை என்று பக்கத்தான் ஹரப்பான் முடிவு செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சினி தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மே 6ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டதை அடுத்து ஜூலை 4ல் அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது.