இந்தோனீசியா: 993 பேர் பாதிப்பு

1 mins read
f55783d2-e53a-4c84-8605-1135e05fea83
இந்தோனீசியாவில் நேற்று ஒரே நாளில் 993 பேரைக் கிருமி தொற்றியது. மொத்தம் 30,514 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார். 1,801 பேர் பலியாகிவிட்டனர். படம்: ஏஎப்பி -

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நேற்று ஒரே நாளில் 993 பேரைக் கிருமி தொற்றியது. மொத்தம் 30,514 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார். 1,801 பேர் பலியாகிவிட்டனர்.

இதனிடையே, தாய்லாந்தில் நேற்று இரண்டு பேரை கொரோனா கிருமி தொற்றியது. யாரும் மரணம் அடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாய்லாந்தில் ஜனவரி முதல் 3,104 பேரைக் கிருமி தொற்றி இருக்கிறது. 58 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள்.