இடது காலை சுறா கடித்ததால் இறந்த ஆடவர்

இடது காலை சுறா கடித்ததால் இறந்த ஆடவர்

1 mins read
8122c63e-cb66-42ea-b488-adc9f754dcee
(கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்) -

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் நீர்ச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்த ஆடவரை சுறா ஒன்று திடீரென தாக்கியதில் அந்த ஆடவர் உயிரிழந்ததாக போலிசார் தெரிவித்தனர்.

பிரிஸ்பேன் மாநிலத்திற்குக் கிழக்கிழலுள்ள கடற்பகுதியில் தாக்கப்பட்ட அந்த ஆடவருக்கு உதவ படகுகளில் சிலர் முன்வந்து அந்தச் சுறாவை விரட்டியதாக அந்நாட்டுப் போலிசார் தெரிவித்தனர். அவர்கள் அந்த ஆடவரை கடற்கரைக்கு கொண்டுவந்தபோதும் அந்த ஆடவரின் காலில் ஏற்பட்ட படுகாயத்தால் அவர் மாண்டதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த அந்த 60 வயது ஆடவர், குவீன்ஸ்லாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.