திறந்த மனதுடன் நடந்துகொள்ள புது பட்டதாரிகளுக்கு ஆலோசனை

திறந்த மனதுடன் நடந்துகொள்ள புது பட்டதாரிகளுக்கு ஆலோசனை

2 mins read
db52a158-8e80-4556-b449-b2ef42601362
-

புதிய பட்டதாரிகள் திறந்த மனதுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று மனிதவள வல்லுநர்கள் ஆலோசனை கூறி உள்ளனர். அத்தகைய பட்டதாரிகள் எங்கே முடியுமோ அங்கே வேலைகளைப் பெறுகிறார்கள். அவர்கள் இப்போதைய கொவிட்-19 சூழலில் தங்கள் எதிர்பார்ப்புகளைத் திறம்பட சமாளிக்க வேண்டி இருக்கும் என்று மனிதவள வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

புதிதாக அல்லது வித்தியாசமாக எதையாவது முயன்றுபார்க்க அவர்களுக்கு இதை விட்டால் வேறு சிறந்த காலம் கிடைக்காது என்றும் தங்களுக்கு அனுபவம் இல்லாத துறைகளில் துணிச்சலாக ஈடுபட்டு திறனையும் விவேகத்தை யும் பட்டதா ரிகள் பலப்ப டுத்திக் கொள்ளவேண்டும் என்றும் ராண்ஸ்டட் என்ற ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் சிங்கப்பூர், மலேசியாவுக்கான நிர்வாக இயக்குநர் குமாரி ஜெயாதாஸ் கூறினார்.

இதேபோலவே , 'மேன்பவ ர்குரூப் சிங்கப்பூர்' என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் நிர்வாகியான குமாரி லிண்டாடியோ தெரிவித்தார்.

புதிய பட்டதாரிகள் தங்களுக்கு விருப்பமான வேலையில் சேர முடியவில்லை என்றாலும் முதலில் ஒரு முயற்சியைத் தொடங்கி பிறகு அதில் முன்னேற முயலவேண்டும் என்று குமாரி லிண்டா கூறினார். பலவற்றையும் கற்கும் வாய்ப்புடன் கூடிய வேலையில் சேர்ந்தால் புதிய பட்டதா ரிகளின் மதிப்பு கூடும். தொடக்க சம்பளம் குறைவு என்றாலும் வேகமாக வேலை யில் உயரலாம் என்று அவர் விளக்கினார்.

அதிக காலமாக வேலை இல்லாமலேயே இருந்து வந்தால் எதிர்கா லத்தில் வேலை யில் சேர்வது சிரமமாகிவிடும் என்று அவர் எச்சரித்தார். கொவிட்-19க்குப் பிறகு ஊழியர் அணி வேறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கு ஏற்ப பட்டதாரிகள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்து வருகிறார்கள்

.