பாலி: கிணற்றில் விழுந்தவர் ஆறு நாட்களுக்குப் பின் மீட்பு

பாலி: கிணற்றில் விழுந்தவர் ஆறு நாட்களுக்குப் பின் மீட்பு

1 mins read
980246a5-240f-4508-bb63-d1a85ecf2f6b
படம்: பாடுங் போலிஸ்/ ஏஎப்பி -

இந்தோனீசியாவின் சுற்றுலாத்தலமான பாலித் தீவில் கிணற்றில் விழுந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் ஆறு நாட் களுக்குப் பிறகு மீட்கப்பட்டார். நாய் துரத்தியதால் அவர் தவறி விழுந்து விட்டார். 29 வயது ஜாகோப் ராபர்ட்சின் குரல் கேட்டு விவசாயி ஒருவர் தகவல் கொடுத்ததால் அவர் உயிர் தப்பினார். நான்கு மீட்டர் ஆழமுள்ள அந்தக்கிணற்றுக்குள் தவித்த ஜாகோப் ராபர்ட்ஸை கடந்த சனிக்கிழமை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆறு நாட்களாக சாப்பாடு இல்லாமல் ராபர்ட்ஸ் மெலிந்துகாணப்பட்டதாகவும் காயமடைந்திருந்ததாகவும் போலிஸ் பேச்சாளர் கூறினார். படம்: பாடுங் போலிஸ்/ ஏஎப்பி