மெக்சிகோ நகரம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலிசார் தாக்கியதற்காக மெக்சிகோ ஆளுநர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இளையர் ஒருவர் மரண மடைந்ததைத் தொடர்ந்து மெக்சிகோ நகரில் ெவள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடைெபற்றன.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலிசார் தாக்கியதில் சிலர் காயம் அடைந்தாக நம்பப்படுகிறது.
இந்த நிலையில் ஜலிஸ்கோவின் மேற்கு வட்டார ஆளுநர் என்ரிகுவே அல்ஃபாரோ, போலிசாரின் நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார்.
"எனக்கு அவமானமாக இருக்கிறது. எனக்கு வேதனையளிக்கிறது. ஜலிஸ்கோவைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவராகவும் ஆளுநராகவும் வலிக்கிறது," என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமை நடந்த மோதலுக்குப் பிறகு 12 பேருக்கு மேல் காணவில்லை என்றும் ஆயுதப் படையினர் அவர்களை கடத்திச் சென்றுவிட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
இதையடுத்து காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படுவர் என்று ஆளுநர் அல்ஃபாரோ கூறினார். பின்னர் சனிக்கிழமை பின்னேரத்தில் அவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். "அனைவரும் வீட்டுக்கு வந்துவிட்டனர், யாரும் காணாமல் போகவில்லை," என்று டுவிட்டர் பதிவிலும் அவர் கூறியிருந்தார்.

