புத்ராஜெயா: வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மலேசியர்கள், நாளை மறுநாள் முதல் தங்கள் வீடுகளிலேயே தனித்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு அங்கீகரித்துள்ள தனிமை இடங்களில் தங்குவதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சா ஃப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
மலேசியா திரும்பும் மக்கள் விமான நிலையங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். யாருக்காவது கொவிட்-19 தொற்று இருப்பது தெரியவந்தால் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள்.
தொற்று இல்லை என்றால் 14 நாட்கள் கட்டாயமாக அவர்கள் வீடுகளில் தனித்திருக்க வேண்டும் என்று அமைச்சர் விளக்கினார். நாடு திரும்புவோர் MySejahtera என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஒருவர் நிபந்தனைக்கு உட்பட்டு தன் வீட்டிலேயே தனித்து இருக்கிறார் என்பதை அந்தச் செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.

