சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் இங்கு தொடர்ந்து வேலை செய்வது குறித்து சிங்கப்பூர், மலேசிய அரசாங்கங்கள் இணக்கம் கண்டவுடன் அவர்கள் இங்கு பயணம் மேற்கொண்டு வேலை செய்யலாம் என்று மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்து உள்ளார்.
"இது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது குறித்த நிபந்தனைகள் வெளியிடப்பட்ட பிறகு, சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் அன்றாடப் பயணங்களை மேற்கொள்ளலாம்," என்று அவர் நேற்று கூறினார்.
மலேசியர்கள் சிங்கப்பூரில் வேலையைத் தொடர்வதற்கு முன்பாக கொவிட்-19 கிருமித்தொற்று பரிசோதனைக்கு அவர்கள் உட்படுத்தப்பட வேண்டும் என்றால், அதற்கு இணக்கம் தெரிவிக்க மலேசியா தயார் என்று திரு இஸ்மாயில் சொன்னார்.

